பா .அய்யாசாமி ஆகிய நான் 

இந்த இணையத்தளத்தின் மூலம் உங்களோடு சில பல சங்கதிகளை பலவிதமாக பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். தங்கள் நேரத்திற்கும் அன்பிற்கும் நன்றி  

கவிதைகளின் காதலன் 

தமிழின் மீதும் கவிதையின் மீதும் கொண்ட அன்பால் பற்றால் கவியரங்கங்களில் கவிபாடுகின்றேன். அதன் காணொளிகளை இங்கே பதிவிடுகிறேன் உங்கள் பார்வைக்காக 

Read More

என்னை பற்றிய சிறு குறிப்பு 

I am பா.அய்யாசாமி ஆகிய நான்... 15/10/1969 ஆம் ஆண்டு மூன்று வயது பாலகன், ஞானமே வடிவான திரு ஞானக்குழந்தை திரு ஞானசம்பந்தருக்கு தன் முலைப்பாலை ஞானப்பாலாக புகட்டிய திரிபுரசுந்தரி எனப் போற்றப்படும் திருநிலைநாயகி் அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் எழுந்து அருள் செய்யும் கழுமலம், திருதோணிபுரம், பிரம்மபுரி உட்பட என பன்னிரெண்டு தலப்பெயர்களை தன்னகத்தே கொண்டுள்ள சீர்காழி எனும் சிறப்பான ஊரிலே பிறந்தவன், இளங்கலை இயற்பியல் பாடம் பூம்புகார் பேரவைக் கல்லூரியில் படித்து, பத்து வருடங்கள், சென்னை தில்லி, உத்திரபிரதேசம், போன்ற நகரங்களில் பணியாற்றி,தற்போது இருபது வருடமாக எனும் இறைவனின் இருப்பிடமும், உலகின் துலாப்பகுதியாக வழங்கப்படும் கெளரி மாயூரம் எனும் பழம் பெயராலும்,மயிலாடுதுறை என பக்தி இலக்கியங்கள் போற்றும் புகழ்மிக்க ஊரில் வாழும் வாய்ப்பைப் பெற்றுள்ளேன். நான் தமிழ் மீது உள்ள ஆர்வத்தில் முதகலைத் தமிழ் பயின்று வருகிறேன், ஐம்பது வயதைக் கடந்த நான் தமிழுக்கும், நான் சார்ந்த தமிழ் மக்களுக்கும், செய்யும் தொண்டுகளை இறைவனுக்கு செய்யும் அறத்தொண்டாய் நினைத்து செய்து வருகிறேன், என் எழுத்துக்கள் வெறும் பக்கத்தக நிறப்புவதாக இருக்கக் கூடாது, தடுமாற்றம் உள்ள மனிதனின் மற்றொரு பக்கத்தை அவன் உள்ளமாற்றத்தால் அவன் வாழ்க்கையை சிறக்கவைக்க வேண்டும் எனும் நோக்கத்தில் விழிப்புணர்வோடு சமுதாய அக்கறையையும் சேர்த்து சிறுகதைகளாய் சிறகடிக்க வேண்டும் என்பதே என்பதே எழுத்தின் நோக்கம். நான் பெற்ற விருதுகளால் சமூகம் என்னைப் புகழ்ந்தாலும் அது அத்தனையும் இந்த பிறப்பில் இறைவன் என் வினைகளை களைய எனக்கு அளித்த வாய்ப்பாகக் கருதி செய்து வருகிறேன் தொடர்ந்து அந்த அற வழியில் என் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதில் உறுதியாய் இருக்கின்றேன்.

Read More »